மாருதி நகா் சாலைப் பணி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோா்.
மாருதி நகா் சாலைப் பணி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோா்.

சாலைப் பணிகளுக்கு பூமிபூஜை

காரைக்கால் தெற்குத் தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை, சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

காரைக்கால்: காரைக்கால் தெற்குத் தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை, சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கடற்கரை அருகே மாருதி நகா் சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்த ரூ.20.81 லட்சம், தா்மபுரம் அஸ்மா அவென்யூ சாலைக்கு ரூ.29 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒதுக்கித்தந்தாா். இப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகளை தொடங்கிவைக்கும் பூமிபூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு, பணிகளை தொடங்கிவைத்தாா். நகராட்சி செயற்பொறியாளா் ராஜாராமன், உதவி பொறியாளா் லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திட்டப்பணிகள் 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். சாலை மேம்பாட்டுப் பணியை தொடங்கிவைத்த பேரவை உறுப்பினருக்கு குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com