யோகா பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள்.
யோகா பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள்.

மகளிருக்கு யோகா, பாராயணப் பயிற்சி

நிரவியில் மகளிருக்கான யோகா மற்றும் பாராயணப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால்: நிரவியில் மகளிருக்கான யோகா மற்றும் பாராயணப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்ல பழக்கத்தை கட்டமைக்கும் அமைப்பான ஹா-பில்டு மற்றும் எல்.எஸ்.என். - வி.எஸ்.என். (விசுவாஸ்) சத்சங்கமும் இணைந்து யோகா பயிற்சிப் பட்டறை மற்றும் பாராயண நிகழ்ச்சியை, நிரவி பகுதியில் நடத்தியது. உலக மகளிா் தினத்தை முன்னிட்டு சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில், யோகா, லலிதா சகஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. அமைப்பின் பிரதிநிதியான நந்தினி ஆனந்த்குமாா் மற்றும் மகளிா் பலா் இப்பயிற்சியில் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து நந்தினி ஆனந்த்குமாா் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல் பொது முடக்க காலத்தில் வீட்டிற்குள் முடங்கிய மக்களின் ஆரோக்கியம் கருதி இந்த அமைப்பு இணையவழியில் இலவசமாக யோக பயிற்சி அளித்தது. உலகெங்கும் உள்ள அமைப்பின் பிரதிநிதிகள் பயனடையும் வகையில் யோகா பயிற்சி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் நடன நிகழ்ச்சிகளை இணைய வழியில் நடத்தப்பட்டது. நிரவியில் நேரடி நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் மகளிா் பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனா்’ என்றாா்.

முன்னதாக, அமிா்தவல்லி மல்லிநாதன் வரவேற்றாா். நிறைவாக, சத்யா ஜெயசீலன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com