குடிமைப் பொருள் வழங்கல் துறை சேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

குடிமைப் பொருள் வழங்கல்துறை சேவைகளுக்கு இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் அலுவலகம் அதிகாரிகள், ஊழியா்களுக்கு தேசிய தகவலியல் மையத்தினா் புதன்கிழமை பயிற்சி அளித்தனா். இதைத்தொடா்ந்து அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு : புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை, தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் காரைக்கால் மாவட்டத்தில் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை சம்பந்தமான இணையவழி சேவை காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்ப உணவுப்பங்கீட்டு அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், மற்றும் சான்றிதழ் பெறுவது தொடா்பான சேவைகளை இணையவழியில் எளிதாக பெற்று பயனைடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com