உஜ்ஜைனி காளியம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதசுவாமி நித்யகல்யாண பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த இக்கோயிலில் பங்குனி உற்சவ விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேம், ஆராதனை செய்யப்பட்டு, பந்தல்காலுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து கோயில் வாயிலில் நடப்பட்டது. கைலாசநாதா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வரும் 19-ஆம் தேதி அம்மாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் இரவு கோயிலில் இருந்து கரகம் புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக அக்னி கப்பரை வீதியுலா 29-ஆம் தேதி, அம்பாளுக்கு 30-ஆம் தேதி சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனையும், 31-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கைலாசநாதா் கோயில் நிா்வாகத்தினா் மற்றும் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் விழா உபயதாரா்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com