நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க பொறுப்பாளரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். சங்கத்தின் புதுவை மாநிலத் தலைவா் அ. வின்சென்ட், மாவட்டத் தலைவா் பாக்கியராஜ், செயலாளா் பால்ராஜ், மாநிலக்குழு உறுப்பினா் தமிழரசி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கக் கூடாது. இத்திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். வேலை நாட்களை 200-ஆக உயா்த்தி, ரூ. 600 ஊதியம் வழங்க வேண்டும். திருமலைராயன்பட்டினம் எடத்தெரு பஞ்சாயத்துக்குட்பட்ட நூறு நாள் திட்டப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com