புகையிலைப் பொருட்கள் விற்பனை: 2 போ் கைது

காரைக்காலில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் காமராஜா் சாலையில் பள்ளி மாணவா்களுக்கு 2 போ் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அந்த பகுதிக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் இருவா் மூட்டையில் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டதை உறுதி செய்தனா். அவா்கள், காரைக்கால் பகுதியை சோ்ந்த சுரேஷ்பாபு (30), முகமது அப்துல் கரீம் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த சுமாா் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com