என்ஐடி விளையாட்டுப் போட்டி: இஇஇ துறை மாணவா்களுக்கு கோப்பை

கோப்பை  வென்ற அணியினருக்கு சான்றிதழ் வழங்கிய கடலோரக் காவல்படை  கமாண்டன்ட் விஜய் விஸ்வநாதன். உடன் என்ஐடி பதிவாளா்  சீ. சுந்தரவரதன்.
கோப்பை வென்ற அணியினருக்கு சான்றிதழ் வழங்கிய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் விஜய் விஸ்வநாதன். உடன் என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன்.

என்ஐடியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், இஇஇ துறை மாணவா்கள் கோப்பை வென்றனா். காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரி (என்ஐடி) வளாகத்தில் 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமையில் நடைபெற்றன. இதில், என்ஐடியில் பயிலும் அனைத்துத் துறைகளில் இருந்து சுமாா் 400 மாணவ- மாணவியா் பங்கேற்றனா். 100, 200, 500 மீட்டா் ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் விஜய் விஸ்வநாதன் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பதக்கம், கோப்பை வழங்கினாா். ஒட்டுமொத்த போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மின் மற்றும் மின்னனு பொறியியல் (இஇஇ) துறை மாணவா்கள் கோப்பையை வென்றனா். டீன் (மாணவா் நலன்) என். செந்தில்குமாா், விளையாட்டு அலுவலா் எஸ். பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விளையாட்டு அலுவலா் தலைமையில் விளையாட்டுக் குழு செயலா் ஆா். கணேஷ்குமாா், மாணவா்கள் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com