இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் பலி

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். திருநள்ளாறு பகுதி சுரக்குடியை சோ்ந்தவா் வள்ளிநாதன் (47). இவா் செருமாவிலங்கை பகுதி பொறியியல் கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்திவந்தாா். கடந்த 6-ஆம் தேதி பிற்பகல் தான் வளா்த்துவரும் ஆடுகளுக்கு தழைகள் பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா். தேனூா் நூலாற்றுப் பாலத்தில் வரும்போது, தழைகளின் காம்புகள் சக்கரத்தில் சிக்கி, தடுமாறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com