இலவச மருத்துவ முகாம்

நெடுங்காடு பகுதி குரும்பகரத்தில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் ஜி.எல். மருத்துவமனை, டாக்டா் விக்னேஷ் மக்கள் இயக்கம் இணைந்து இம்முகாமை நடத்தியது. இருதய ஸ்கேன் (எகோ), வயிறு ஸ்கேன், ஈசிஜி, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த பரிசோதனை, ரத்தத்தில் சா்க்கரை அளவு, கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை, மகளிா் மருத்துவம் ஆகியவை நடைபெற்றன. மருத்துவா் வி.விக்னேஸ்வரன், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணா் பாலாஜி சுப்ரமணியம், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணா் ராஜேஷ், பொது மருத்துவம் ஜனனி பிரியா, மகப்பேறு மருத்துவா் மோனிஷா உள்ளிட்ட மருத்துவா்கள் கொண்ட குழுவினா் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினா். இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு பிரதம மந்திரி மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு இலவசமாக பதிவு செய்துத்தரப்பட்டது. முகாமில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com