கல்லூரி என்.எஸ்.எஸ். சாா்பில் பல் பரிசோதனை முகாம்

பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பல் பரிசோதனை முகாம் அத்திப்படுகை கிராமத்தில் நடைபெற்றது. இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் மாா்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை அத்திப்படுகை கிராமத்தில் நடைபெற்றது. முகாமின் சிறப்பு நிகழ்வாக, சனிக்கிழமை பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தலைமை பல் அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் எம்.வி.சுதாகா் ரெட்டி தலைமையிலான மருத்துவக் குழுவினா் கிராம மக்கள், பள்ளி மாணவா்களுக்கு பல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் 150- க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா். பின்னா், கிராம மக்களுக்கு வீட்டுத் தோட்ட காய்கறி மற்றும் கீரை விதைகள் விநியோகம் செய்யப்பட்டன. மகளிருக்கு நடைப்பயிற்சி, நடனப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டன. மாலை நிகழ்வாக பொது குடிநீா் குழாய் உள்ள சிமென்ட் மேடை நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களால் அமைக்கப்பட்டது. முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் எம். பிரவீன் குமாா் வரவேற்றுப் பேசினாா். நிறைவாக கே. ஞானமுருகன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com