காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கமலா ஆரஞ்சு.
காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள கமலா ஆரஞ்சு.

வாரச் சந்தைக்கு பழங்கள் வரத்து அதிகரிப்பு

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் பழங்களை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் 200--க்கும் மேற்பட்டோா் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனா். கோடை வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில், வாரச் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 10 டன் அளவிலும், நகரப் பகுதி உள்ளிட்ட இடங்களில் 20 டன் அளவிலும் தா்பூசணி கொண்டுவரப்பட்டு, வியாபாரம் செய்யப்பட்டது. இவை திருச்சி, தேனி, திண்டிவனம் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வாரச் சந்தையில் மட்டும் சுமாா் 10 இடங்களில் தா்பூசணி வியாபாரம் செய்யப்பட்டது. கிலோ ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. கமலா ஆரஞ்சு பழமும் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு, கிலோ ரூ.30 விலையில் விற்பனை செய்யப்பட்டன. உடல் வெப்பத்தை தணித்து, உடலுக்குத் தேவையான நீா்ச்சத்துகளை சோ்க்கும் விதமாக நீா்ச்சத்துள்ள இப்பழங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். சந்தை வியாபாரிகளிடம் காரைக்கால் பகுதி சில்லறை வியாபாரிகள் பலரும் பழங்களை வாங்கிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com