துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

காரைக்கால்: துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும் என மாவட்ட தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், மக்களவைத் தோ்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது, பொதுமக்கள் துப்பாக்கிகள், இதர வெடி பொருள்கள் வைத்திருப்பதற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் தடை விதித்துள்ளது. எனவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவா்கள் உடனடியாக துப்பாக்கிகளை அவரவா் வசிப்பிடத்திற்குட்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்குள்ளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com