மக்களுக்கு கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

காரைக்கால்: போதை ஒழிப்பு, சிறாா்கள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு, சிறாா் பாலியல் வன்கொடுமை, எய்ட்ஸ் விழிப்புணா்வு, 100 சதவீதம் வாக்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். காரைக்கால் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு, சிறாா்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதை தடுத்தல் குறித்து விழிப்புணா்வு கருத்துகளுடன் பதாகை ஏந்தி பேரணியாக சென்று மக்களை சந்தித்தனா். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாயிலில், பாட்டுப்பாடி, நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பொதுமக்கள் ஏராளமானோா் இந்த நிகழ்ச்சியை பாா்வையிட்டனா். முன்னதாக விழிப்புணா்வு நிகழ்வை கல்லூரி முதல்வா் பாலாஜி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் நளினா, தாமோதரன், கல்யாணசுந்தரம் உட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com