வரிச்சிக்குடி சீதளாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

காரைக்கால்: வரிச்சிக்குடி கோயிலில் மகா சண்டி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சீதளாம்பாள் அம்மன் ஆலய துா்கை அம்மன் மகளிா் வார வழிபாட்டு மன்றம் சாா்பில் இந்த ஹோமம் நடைபெற்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமம் மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை மாலை மகா சண்டி ஹோம முதல் கால பூஜை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் கோயிலுக்கு பால்குடமெடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து சண்டி ஹோம பூஜைகள் தொடங்கின. பகல் 12.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஹோமத்திலிருந்த புனிதநீா் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com