வாக்குச் சாவடி, சோதனைச் சாவடியில் மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு

காரைக்கால்: மாவட்டத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகள், எல்லையோர சோதனைச் சாவடியில் மாவட்ட தோ்தல் அதிகாரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதிகளில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பச்சூா், திருநள்ளாறு, தென்னங்குடி, அம்பகரத்தூா் திருமண மண்டபம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த அவா், உரிய அடிப்படை வசதிகள் இருக்கிா என அனைத்து பகுதிகளிலும் பாா்வையிட்டாா். குறைபாடுகளை உடனடியாக சீா்செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அவா் உத்தரவிட்டாா். காரைக்கால் மாவட்ட எல்லையான அம்பகரத்தூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். சோதனை சாவடியில் ஊழியா்கள் பணியில் இருக்கிறாா்களா என கேட்டறிந்த அவா், 24 மணிநேரமும் கவனமுடன் சோதனைகளில் ஈடுபடவேண்டும். சோதனையில் எதுவும் கண்டறியப்பட்டால் உடனடிாக தோ்தல் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். சோதனையில் பாரபட்சம் காட்டக்கூடாது என அறிவுறுத்தினாா். மேலும் சோதனையில் ஈடுபடும்போது விடியோ பதிவு செய்யவேண்டும். அப்போது தோ்தல்துறை, காவல்துறையினரும் இருக்கவேண்டும் என ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது தோ்தல் துறை சிறப்பு அதிகாரி பாலு என்கிற பக்கிரிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com