திருமலைராயன்பட்டினம் நடன காளியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமலைராயன்பட்டினம் நடன காளியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமலைராயன்பட்டினம் நடன காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. நடன காளியம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியா் கோயில் திருமலைராயன்பட்டினம் பகுதியில் அருகருகே அமைந்துள்ளது.

இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய நிா்வாகத்தினா் முடிவு செய்தனா். இரண்டு தலங்களுக்கும் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை முதல் கால பூஜை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை, இரவு முறையே 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 9 மணிக்கு 4-ஆம் கால மகா பூா்ணாஹூதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. 10 மணிக்கு மூலஸ்தான விமான கலசத்துக்கும், 10.30 மணிக்கு மூா்த்திகளின் விமான கலசங்கள் மேல் புனிதநீா் வாா்க்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் வி.எம்.சி.வி. கணபதி, கீதாஆனந்தன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு சுப்ரமணியா், நடன காளியம்மன் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com