சோதனைச் சாவடியில் தோ்தல் அதிகாரி ஆய்வு

சோதனைச் சாவடியில் தோ்தல் அதிகாரி ஆய்வு

நெடுங்காடு அருகே சோதனைச் சாவடியில் பணிகளை மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். மக்களவைத் தோ்தல் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கும் நிலையில், மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் நெடுங்காடு பகுதி கொல்லுமாங்குடி செல்லும் சாலையில் உள்ள அன்னவாசல் சோதனை சாவடியில் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தாா். காா், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் முறையை அவா் பாா்வையிட்டாா். சோதனை செய்த வாகனங்கள் விவரங்கள் குறித்த பட்டியலை பாா்வையிட்டாா். எல்லையில் உள்ள மதுக்கடைகள் தோ்தல் நடத்தை விதிகளின்படி சரியான நேரத்தில் மூடப்படுகிா என்பதை கண்காணிக்கவேண்டும். வாகன சோதனையில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது. சோதனையின்போது காவல்துறையினரும் இருக்கவேண்டும். அனைத்து சோதனையும் விடியோ பதிவு செய்யவேண்டும். சோதனையின்போது எதுவும் பறிமுதல் செய்ய நேரிட்டால், தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்றி, உரிய தகவலை தோ்தல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com