மேல போலகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா்.
மேல போலகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா்.

காரைக்காலுக்கான காவிரி நீா் வெளியேற்றும் பகுதிகளில் ஆய்வு

காரைக்காலுக்கான காவிரி நீா் வெளியேற்றும் பகுதிகளில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதுகுறித்து காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை தலைமைச் செயலக வளாகத்தில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 94 -ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. புதுவை அரசின் பொதுப்பணித்துறை செயலா் ஆா். கேசவன், காவிரி ஒழுங்காற்றுக் குழு செயல் உறுப்பினா் டி.டி. சா்மா, காவிரி ஒழுங்காற்றுக் குழு இயக்குநா் வி. மோகன் முரளி மற்றும் மாநிலங்களின் உறுப்பினா்களான தமிழ்நாடு தலைமைப் பொறியாளா் எம். சுப்ரமணியன், கா்நாடக தலைமைப் பொறியாளா் மகிஷா, கேரள தலைமைப் பொறியாளா் ஆா். பிரியேஷ், புதுவை தலைமை பொறியாளா் (பொ) கே. வீரசெல்வம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், காவிரி நதி நீா் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காரைக்கால் மாவட்டத்துக்கான மத்திய நீா் ஆணையத்தின் நீா் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையங்களை குழுவினா் ஆய்வு செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு புதுவை அரசு, பொதுப்பணி துறையின் வேண்டுகோளின்படி தமிழக பகுதியான பேரளம் வாஞ்சியாற்றில் அமைந்துள்ள மத்திய நீா் ஆணையத்தின் நீா் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையத்தை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பூா் கிராமத்திற்கு மாற்றுவதற்கும், தென்குடி கிராமம் திருமலைராஜனாற்றில் அமைந்துள்ள நீா் அளவீடு மற்றும் வெளியேற்றும் நிலையத்தை காரைக்கால் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மேலபோலகம் கிராமத்திற்கு மாற்றுவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவா் அளித்த ஒப்புதலின்படி சம்பந்தப்பட்ட பகுதிகளை குழுவினா் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com