விழிப்புணா்வு கோலப் போட்டி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஸ்வீப் அமைப்பு மூலம் நடத்தப்பட்டுவருகிறது.

காரைக்கால்: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்குப் பதிவு குறைந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஸ்வீப் அமைப்பு மூலம் நடத்தப்பட்டுவருகிறது. நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதியான கோட்டுச்சேரி பகுதி அண்ணா நகா், அய்யங்குளத்து தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஸ்வீப் அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களிடையே ஆா்வத்தை அதிகரிக்கும் வகையில் கோலப் போட்டி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் அந்த பகுதியின் குடியிருப்புவாசிகள் வண்ணக் கோலங்களிட்டு, தோ்தலில் வாக்களிப்போம் என உறுதிமொழி வாசங்களை பதிவு செய்தனா். போட்டியில் பங்கேற்றோருக்கு ஸ்வீப் அமைப்பு சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன் மற்றும் ஞானமுருகன், மேகநாதன் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com