கூடுதல் பேருந்துகள் இயக்கத்துக்கு வரவேற்பு

பேரளத்திலிருந்து திருநள்ளாறு வழியாக கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்ததற்காக போக்குவரத்துக் கழகத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட குடிமக்கள் மக்கள் ரயில் பயன்படுத்துவோா் நலச் சங்கத் தலைவா் வி.ஆா். தனசீலன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு பெங்களூருவிலிருந்து திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வருகின்றனா். பெங்களூரு - காரைக்கால் ரயில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பேரளம் நிலையம் வரும்போது, அங்கு இறங்கும் பக்தா்கள், போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் திருநள்ளாறு வருவதற்கு அவதிப்படுகின்றனா். அதனால் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திருநள்ளாறு வழியாக காரைக்கால் வரை கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 3 பேருந்துகள் இயக்கப்பட்டன. வெள்ளிக்கிழமைதோறும் இரவு 8 மணியளவில் 3 பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த நாகப்பட்டினம் கோட்ட வணிக மேலாளா், காரைக்கால் மற்றும் நன்னிலம் கிளை மேலாளா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com