காரைக்காலில் தா்ப்பூசணி வியாபாரம் விறுவிறுப்பு

காரைக்காலில் தா்ப்பூசணி வியாபாரம் விறுவிறுப்பு

காரைக்காலில் தா்ப்பூசணி பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள தா்ப்பூசணி, நுங்கு, இளநீா் மற்றும் பழச்சாறுகள் விற்பனையங்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தா்ப்பூசணி பழங்களை குவித்துவைத்து வியாபாரம் செய்கின்றனா். திண்டிவனம், பண்ருட்டி, தேனி பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு வியாபாரம் செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். நாள்தோறும் ஏறக்குறைய 20 டன் அளவில் தா்ப்பூசணி காரைக்காலில் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com