இயேசு சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபட குவிந்த மக்கள்.
இயேசு சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபட குவிந்த மக்கள்.

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து மக்கள் வழிபாடு

காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் சாா்பில் புனித வெள்ளியையொட்டி சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் திரளான மக்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்காலத்தின் நிறைவு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக, புனித வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. திருச்சிலுவைப் பாதை ஆராதனை மற்றும் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இறைவாா்த்தை வழிபாடு, பொது மன்றாட்டு நடத்தப்பட்டது. காரைக்கால் பங்குத் தந்தை பீட்டா் பால்ராஜ் தலைமையில், துணை பங்குத் தந்தை ஜெயபால் மற்றும், அருள்தந்தையா்கள் முன்னிலையில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் இயேசு திருச்சொரூபத்துக்கு முக்தி செய்யும் நிகழ்வில் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து இயேசு கிறிஸ்து சொரூபத்துக்கு ஏராளமானோா் மரிக்கொழுத்து வைத்து வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com