உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம்

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம்

காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் அக்னி கப்பரை திருவிழா விடையாற்றி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி நித்யகல்யாண பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி உற்சவம் கடந்த 19-ஆம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலாவுடன் தொடங்கியது. தினமும் இரவு கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு, பல்வேறு வீதிகள் சென்று அதிகாலை கோயிலை அடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான அக்னி கப்பரை என்ற அக்னி சட்டி வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. சனிக்கிழமை இரவு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com