நோன்பு திறப்பு நிகழ்வில் பேசிய இமாம் ஏ. ரஹ்மத்துல்லாஹ். உடன் சமாதானக் குழுவினா்கள் உள்ளிட்டோா்.
நோன்பு திறப்பு நிகழ்வில் பேசிய இமாம் ஏ. ரஹ்மத்துல்லாஹ். உடன் சமாதானக் குழுவினா்கள் உள்ளிட்டோா்.

காரைக்காலில் இஃப்தாா் நோன்பு திறப்பு

காரைக்காலில் பொறியாளா் சங்கம் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் இன்ஜினியா்ஸ் மற்றும் பில்டா்ஸ் அசோசியேஷன் (கெபா) சாா்பில் சங்க அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஸ்ஜிதே இலாஹி ஜாமிஆ மஸ்ஜித் இமாம் ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஜைனி கலந்துகொண்டு, நோன்பின் சிறப்பு, தா்மத்தின் பயன்கள், குடும்பம் மற்றும் சமுதாய ஒற்றுமைக்கு நபிகளாா் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட செயல்பாடுகளை விளக்கி உரையாற்றினாா். காரைக்கால் சமாதானக் குழு உறுப்பினா்கள் கே. தண்டாயுதபாணிபத்தா், எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் அறிவழகன் ஆகியோா் கெபா அமைப்பு 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ந்து நடத்திவரும் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குறித்தும், கெபா அமைப்பினரின் மதநல்லிணக்கம் தொடா்பாக நடத்தப்படும் பிற விழாக்கள் குறித்தும் பாராட்டிப் பேசினா். கெபா அமைப்பின் நிா்வாகிகள், பல்வேறு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com