நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிரவி போராட்டக் குழுவை சோ்ந்த எம்.ஏ. நிசாா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

நிரவி பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரவி பகுதி மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமத்தினரும் சிகிச்சைக்காக வருகின்றனா். நிலையத்துக்கென ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பயன்பாட்டில் இருந்தது. பின்னா் அது பழுதாகிவிட்டதால், 108 ஆம்புலன்ஸ் சேவை இந்நிலையத்தில் தொடங்கப்பட்டது.

திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆம்புலன்ஸ் வாகனப் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்ததால், போக்குவரத்து துறையால் முடக்கப்பட்டது. இதனால் நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தின் 108 ஆம்புலன்ஸை திருப்பப்பட்டினத்திற்கு எடுத்துச் சென்று விட்டனா்.

இந்த பகுதி கிராமத்தினருக்கு ஏதேனும் சுகவீனம் ஏற்பட்டால், திருப்பட்டினத்திலிருந்து ஆம்புலன்ஸ் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே நிரவி நிலையத்துக்கு தனியாக ஆம்புலன்ஸை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com