ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வர சுவாமி கோயிலில் அமுது படையல் விழா நாளில் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீ பிட்சாடன மூா்த்திக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது.

இந்த வழிபாட்டில் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com