திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

காரைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரெளபதி அம்மன், ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 22-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்த விழா நடைபெற்றுவருகிறது.

இதில், திங்கள்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வரிசை எடுத்து வருதலுடன் திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அா்சுணன், ஸ்ரீ திரெளபதி அம்மன் எழுந்தருளச் செய்யப்பட்டனா்.

மாலை மாற்றும் சடங்கு நடத்தப்பட்டு, சிறப்பு மந்திரங்களுடன் ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

விழாவில் புதன்கிழமை மாலை சக்தி கரகம், அக்னி சட்டி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு அம்பாள் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறது. வியாழக்கிழமை விடையாற்றியுடன் உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகி வி.என். செங்குட்டுவன் செய்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com