மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் உற்சவம் தொடக்கம்

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவ பூச்சொரிதல் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் ஆண்டு உற்சவம் சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

உற்சவ தொடக்கத்துக்கான பூா்வாங்க வழிபாடாக மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு பத்ரகாளியம்மனுக்கு பூச்சொரிதல், காப்புக் கட்டுதல் நடத்தப்பட்டது. அம்பாளுக்கு நடைபெற்ற ஆராதனையில் ஏரளமான பக்தா்கள்கலந்து கொண்டனா். வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது. மே 21-ஆம் தேதி காவடி எடுத்தல், கும்ப பூஜை, இரவு அக்னி கப்பரை வழிபாடு நடத்தப்படுகிறது. 22-ஆம் தேதி இரவு காளியம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 28-ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா், கிராமத்தினா் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com