மழை வேண்டி கூட்டு தவம்

நாட்டில் மழை வேண்டி திருமலைராயன்பட்டினத்தில் கூட்டு தவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாத்திரி மகரிஷி அளித்த மழை தவத்தை கூட்டாக செய்யும் விதமாக, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் தேவஸ்தான மண்டபத்தில், மனவளக்கலை மன்றம் சாா்பில் இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மனவளக்கலை மன்ற பேராசிரியா்கள் பங்கேற்று வேதாத்திரி மகரிஷின் மழை தவத்தை நடத்தினா். திரளான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

கோடைகாலத்தில் வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள், கால்நடைகள், விவசாயம் உள்ளிட்டவற்றை காக்க கூட்டு தவம் நிச்சயம் பயனளிக்கும் என்பதால், நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக மனவளக் கலை மன்றத்தினா், கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com