ஜிப்மா் மருத்துவ சிறப்பு முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஜிப்மா் சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்ற சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ஜிப்மா் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் மாதம் இரு முறை வந்து மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகள் வழங்குகின்றனா்.

நிகழ் மாதத்தின் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெற்றது. புதுவை ஜிப்மரின் சிறுநீரகவியல் சம்பந்தமான சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்று மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com