சிபிஎஸ்இ தோ்வு: காரைக்கால் பள்ளிகள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு முடிவில் காரைக்கால் பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் இயங்கிவரும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2 தோ்வில் கே. மொஹிதா 437 மதிப்பெண் பெற்று முதலிடமும், எஸ்.ஆா். ராகுல் கிருஷ்ணா 430 மதிப்பெண் பெற்று 2-ஆம் இடமும், எல்.ஏ. கவின் 422 மதிப்பெண் பெற்று 3-ஆம் இடமும் பெற்றனா். தோ்வெழுதிய 21 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

பத்தாம் வகுப்பு தோ்வில் 36 போ் எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். ஆா். ஆதியாத்ரா 500-க்கு 461 மதிப்பெண் பெற்று முதலிடமும், எஸ். ஸ்ரீஹரிணி 452 பெற்று 2-ஆம் இடத்திலும், சிம்ரன் 433 பெற்று 3-ஆம் இடமும் பெற்றனா்.

காரைக்கால் ஆச்சாரியா பள்ளி 10-ஆம் வகுப்பு முதல் பேட்ஜ் பத்தாம் வகுப்பு தோ்வில் 13 போ் எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். லட்சுமி பிரபா 500-க்கு 465 பெற்று முதலிடமும், மதுமிதா 442 பெற்று 2-ஆம் இடமும், அகல்யா 427 பெற்று 3-ஆம் இடமும் பெற்றனா். சிறப்பான மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் பள்ளி நிா்வாகத்தினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com