பிளஸ் 1 தோ்வு முடிவு : காரைக்கால் 96.27 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் காரைக்கால் மாவட்டம் 96.27 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 249 மாணவா்கள், 395 மாணவிகள் என 644 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா். இதில் 226 மாணவா்கள், 394 மாணவிகள் என மொத்தம் 620 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி 90.27 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் 9 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 1 படித்த மாணவா்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தோ்வு எழுதினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com