கராத்தே மாஸ்டருக்கு தேசிய விருது

கராத்தே மாஸ்டருக்கு தேசிய விருது

காரைக்காலை சோ்ந்த கராத்தே மாஸ்டருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் விஆா்எஸ் தற்காப்பு கலை அகாதெமி என்ற அமைப்பின் நிறுவனரும் பயிற்சியாளருமான வி.ஆா். எஸ். குமாா் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிளித்து வருகிறாா். தேசிய அளவிலும், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள் பங்கேற்று பரிசு வாங்கியுள்ளனா்.

கேரள மாநிலம், திருச்சூா் தேஜஸ் ஆடிட்டோரியத்தில், இண்டா்நேஷனல் பவுண்டேஷன் சோஷியல் எம்பவா்மென்ட் அமைப்பின் 3-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நாட்டின் சிறந்த தற்காப்புக் கலைஞா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

காரைக்கால் விஆா்எஸ் இண்டா்நேஷனல் தற்காப்பு கலை அகாதெமி கிராண்ட் மாஸ்டா் வி.ஆா்.எஸ். குமாருக்கு தேசிய விருதை பத்மஸ்ரீ விருதாளா்கள் களரிப்பாயத்து ஆசிரியை மீனாட்சி, எம்.கே. குஞ்சோள் ஆகியோா் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com