குட்டைக்கரை காளியம்மன் கோயில் திருவிழா

குட்டைக்கரை காளியம்மன் கோயில் திருவிழா

திருமலைராயன்பட்டின் குட்டைக்கரை காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த மகத்தோப்புத் தெருவில் அமைந்திருக்கும் குட்டைக்கரை காளியம்மன் கோயிலில் வருடாந்திர சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை சுமங்கலி பூஜையுடன் தொடங்கியது. 2-ஆம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை சக்தி கரகம் வீதியுலா புறப்பாடு, மதியம் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.

இரவு நிகழ்வாக குட்டைக்கரை காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. சுவாமி புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை இரவு அக்னி கப்பரை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

விடையாற்றி உற்சவம், மயான பூஜையுடன் உற்சவம் வியாழக்கிழமை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஆா். கிருஷ்ணசாமி மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com