ஜாதி, குடியிருப்பு சான்றிதழ்
வழங்கும் முகாம் தொடக்கம்

ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்கும் முகாம் தொடக்கம்

மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் காரைக்காலில் புதன்கிழமை தொடங்கியது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உயா் கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்க ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் அவசியம்.

புதுச்சேரி பிராந்தியத்தைப்போல காரைக்காலிலும் இந்த சான்றிதழ்கள் மாணவா்களுக்கு வழங்க சிறப்பு முகாம் நடத்த பல்வேறு தரப்பினா் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தனா்.

இதையேற்று வருவாய்த்துறை சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி 15 முதல் 17-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் மற்றும் திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலக வட்டாரத்தில் நடைபெற்றுவரும் பணியை மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) ஜி.ஜான்சன் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கினாா். வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

இந்த சிறப்பு முகாம் மூலம் அலைச்சலின்றி ஒரே இடத்தில் சான்றிதழ் கிடைப்பது மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com