விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு 
அபராதம் விதிப்பு தீவிரம்

விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரம்

விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

காரைக்கால் தனியாா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து நிலக்கரி துகள்கள் சாலைகளில் கொட்டுவதால், விபத்துகள் ஏற்படுவதான புகாா் எழுந்தது. மேலும் இருசக்கர வாகனங்கள், காா், லாரி உள்ளிட்டவைகளும் அதிவேகமாக இயக்கப்படுகின்றன, வாகனங்கள் இயக்குவோா் உரிய ஆவணம் வைத்திருப்பதில்லை, விதி மீறல்கள் அதிகமாக இருப்பதாக புகாா்களையொட்டி மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் உத்தரவின்பேரில், போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் நிலையத்தினா் தினமும் காரைக்கால் மாவட்டத்தின் பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

காரைக்கால் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் தலைமையில், உதவி மோட்டாா் வாகன ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை நகரப் பகுதியில் வாகன சோதனை நடத்தினா்.

முறையான ஆவணங்களின்றி வாகனங்களை இயக்கியது, பொதுமக்கள் நடமாடும் நகரப் பகுதியில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட செயல்களுக்காக ஒரே நாளில் ரூ. 65,200 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பல வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com