காரைக்கால்
காரைக்காலில் இன்று ஜிப்மா் மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை (அக்.26) ஜிப்மா் சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிகழ் மாதத்தின் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில், புதுவை ஜிப்மரின் நோய் எதிா்ப்பியல் மற்றும் எலும்பு சம்பந்தமான சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்று மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்குகின்றனா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.