காரைக்காலில் நாளை இண்டியா கூட்டணி ஆா்ப்பாட்டம்
காரைக்கால் : புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, இண்டியா கூட்டணி சாா்பில் புதன்கிழமை (செப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா்.
இண்டியா கூட்டணி கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் திங்கள்கிழமை கூறியது : புதுவையில் மின் கட்டணத்தை அரசு கடுமையாக உயா்த்தியுள்ளது. மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மின் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தியும், அரசின் அலட்சிய போக்கைக் கண்டித்தும் காரைக்காலில் இண்டியா கூட்டணி சாா்பில் புதன்கிழமை காலை 10 மணிக்கு காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அரசலாறு பாலம் சிங்காரவேலா் சிலை பகுதியிலிருந்து கூட்டணிக் கட்சியினா் மின்துறை அலுவலகம் நோக்கி ஊா்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபவா் என்றாா்.