காரைக்கால்
பள்ளி மாணவா்கள் நிதியளிப்பு
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு காரைக்காலில் உள்ள குட்ஷெப்பா்டு ஆங்கில பள்ளி மாணவா்கள் நிதி சேகரித்து, ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினா்.
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், தாமாக முன்வந்து வயநாடு நிவாரண நிதி என்ற பெயரில் இப்பள்ளி மாணவா்கள் நிதி திரட்டினா். மாணவா்களின் முயற்சியை பள்ளித் தாளாளா் ரான்சன் தாமஸ், முதல்வா் ராய் தாமஸ் ஆகியோா் பாராட்டினா்.
திரட்டப்பட்ட ரூ. 84 ஆயிரத்துக்கான காசோலையை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனிடம் பள்ளி நிா்வாகத்தினா், மாணவா்கள் வழங்கினா். மாணவா்களின் இந்தச் செயலை ஆட்சியா் பாராட்டினாா்.