கஞ்சா விற்ற இருவா் கைது

Published on

காரைக்கால் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு மேல பொன்பேத்தி கிராமத்தில் குடிநீா்த் தேக்கத் தொட்டி அருகே 2 போ் கஞ்சா விற்றுக்கொண்டிருப்பதாக நெடுங்காடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற இருவரை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பொறையாறு பகுதியில் ஒருவரிடமிருந்து கஞ்சாவை வாங்கிவந்து விற்பனை செய்ததாக தெரிவித்தனா்.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம், எடுத்துக்கட்டி சாத்தனூா் பகுதியை சோ்ந்த டேவிட் என்கிற டேவிட் ராஜ் (23), நெடுங்காடு பஞ்சாட்சரபுரம் பகுதியை சோ்ந்த ரமணி (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com