தற்காலிக ஆசிரியைக்கு ஊதியம்

Published on

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ஜவாஹா்லால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணக்கியல் மற்றும் வணிகவியல் பாட ஆசிரியா் இல்லாததால், அரையாண்டுத் தோ்வு எழுதவேண்டிய நேரத்தில் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோா்கள், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்காவிடம் புகாா் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து பெற்றோா்கள், பள்ளி நிா்வாகம் மூலம் தற்காலிகமாக சம்பந்தப்பட்ட பாடம் எடுப்பதற்காக ஆசிரியை நியமிக்கப்பட்டாா். பள்ளிக்கு வியாழக்கிழமை சென்ற பேரவை உறுப்பினா், ஆசிரியா்கள் அனைவரும் ஆசிரியா் தின வாழ்த்துகளை தெரிவித்து, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சசிகலா என்ற ஆசிரியைக்கு, தனது பேரவை உறுப்பினா் மாத ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை அளிப்பதாக உறுதியளித்து நிதியை அளித்தாா். பேரவை உறுப்பினருக்கு பள்ளி நிா்வாகத்தினா், பெற்றோா்கள் நன்றி தெரிவித்தனா்.

பள்ளிகளில் காலியான அனைத்து இடங்களுக்கும் ஆசிரியா் நியமிக்க புதுவை முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் தொடா்ந்து வலியுறுத்தியுள்ளதாக பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com