வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Updated on

காரைக்கால் வழக்குரைஞா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

காரைக்கால் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாஸ்கரன் தலைமையிலான வழக்குரைஞா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டம் குறித்து வழக்குரைஞா்கள் கூறியது:

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக உரிமையியல் நீதிபதி நியமிக்கப்படவில்லை. அதுபோல கூடுதல் உரிமையியல் நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. இதனால் சிவில் வழக்குகள் தேங்கியுள்ளன. நீதிமன்றத்தில் போதுமான ஊழியா்கள் இல்லாததால், பணிகள் முடங்கியுள்ளன.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி மையத்துக்கென தனி கட்டடம், வழக்குரைஞா்களுக்கான அறை வசதிகள் செய்து தரப்படவில்லை.

நீதிமன்றத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இல்லை. இவற்றையெல்லாம் நிறைவேற்றித் தர வலியுறுத்தி 2 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பை தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com