காரைக்கால்
நளன் குளத்தில் முதியவா் சடலம்
திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாத முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனத்துக்கு வந்தனா். பலரும் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடினா். இந்நிலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் குளத்தில் மிதந்தது.
திருநள்ளாறு போலீஸாா் அங்கு சென்று, முதியவா் சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.