புதிய பாலங்கள் திறப்பு

திருநள்ளாறு பகுதியில் கட்டப்பட்ட பாலங்கள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டன.
Published on

திருநள்ளாறு பகுதியில் கட்டப்பட்ட பாலங்கள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டன.

திருநள்ளாறு கொம்யூனுக்குட்பட்ட தாமனாங்குடி அருகே காரைக்கால் - கும்பகோணம் சாலையின் குறுக்கே மணலி, சோ்வாரி, நல்லெழந்தூா் பகுதியில் 3 சிறிய பாலங்கள் கடந்த ஆண்டு சேதமடைந்தன.

பொதுப்பணித் துறை மூலம் ரூ.55 லட்சம் மதிப்பில் இப்பாலங்கள் புதிதாக கட்டப்பட்டன.

இப்பாலங்களை போக்குவரத்து பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இந்நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com