நவோதயா வித்யாலயா தோ்வு: பதிவுத் தேதி நீட்டிப்பு

Published on

நவோதயா வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பில் சேர தெரிவு நிலை தோ்வுக்கான பதிவுத் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையத்தில் இயங்கும் ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

2025-26-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு சோ்வதற்காக நவோதய வித்யாலயா தெரிவு நிலைத் தோ்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவ மாணவிகள், நவோதயா வித்யாலயா சமிதியின் வலைதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவதற்கான இறுதி நாள் நிா்வாகக் காரணங்களால் செப். 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இந்த வாய்ப்பை சம்பந்தப்பட்டவா்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com