காய்ச்சல், வயிற்றுப் போக்கு: பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

காய்ச்சல், வயிற்றுப்போக்கு பரவும் நிலையில் மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Published on

காய்ச்சல், வயிற்றுப்போக்கு பரவும் நிலையில் மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு பரவி வருவதாக, நலவழித் துறை நிா்வாகம் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதனால் மக்கள் விழிப்புணா்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

நன்கு காய்ச்சிய பின்னரே குடிநீரை பருக வேண்டும். சுற்றுப்புறத்தில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com