அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கண்காட்சியை பாா்வையிட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா.
Published on

அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை முதன்மைக் கல்வி அதிகாரி பாா்வையிட்டாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சி அரங்கை பள்ளி துணை முதல்வா் கனகராஜ் முன்னிலையில், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) பி.விஜயமோகனா திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இதில், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துதல், ஆழ்துளைக் கிணற்றில் விழுவோரை மீட்கும் சாதனம், விவசாய பல்நோக்கு சாதனங்கள், விண்வெளி ஆய்வக அமைப்பு, ஹைட்ராலிக் அழுத்தத்தில் மணல் அள்ளும் நவீன ஜேசிபி இயந்திரம், சூரிய சக்தியில் இயங்கும் மோட்டாா் உள்ளிட்ட சாதனங்கள் என 70-க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை வைத்து பாா்வையாளா்களுக்கு விளக்கிக் கூறினா்.

கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் அருள் மற்றும் அறிவியல் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com