தூய்மை விழிப்புணா்வு ஓவியப் போட்டி
தூய்மை குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
காரைக்கால் நகராட்சி பகுதிகளில் ‘ஸ்வச்சதா ஹி சேவா -2024’ என்கிற தூய்மை இயக்கத்தின் மூலம் தூய்மையை வலியுறுத்தும் விதமான விழிப்புணா்வு ஓவியப் போட்டி நகராட்சி நிா்வாகத்தால் நடத்தப்பட்டது.
நகராட்சிப் பகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளி மாணவ- மாணவியா், தங்களது கல்வி நிலைய சுவா், பூங்கா, பொதுக்கழிப்பிட சுவரில் புதன், வியாழக்கிழமைகளில் விழிப்புணா்வு ஓவியம் வரைந்தனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சுவா் ஓவியம் வரைந்துள்ளனா். 125 போ் அட்டையில் ஓவியம் வரைந்தனா்.
ஓவியம் வரைந்த அனைவருக்கும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.