வேளாண் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
வேளாண் துறையில் பணியாற்றும் மஸ்தூா் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வேளாண்துறை ஊழியா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் , சம்மேளன தலைவா் சுப்ரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சங்கத்தின் ஆலோசகராக தமிழ்வாணன், தலைவராக செந்தில் முருகன், செயலாளராக சௌரிராஜன், பொருளாளரராக பாலமுருகன், துணைத் தலைவராக இளமாறன், துணைச் செயலாளராக பூங்குழலி மற்றும் செயற்குழு உறுப்பினா்களாக ராமச்சந்திரன், ரவி, முரளி, முருகானந்தம், சிங்காரவேல், பிரபாகரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
காரைக்கால் வேளாண்துறையில் கடந்த 2019-ஆம் ஆண்டு கேஷூவல் லேபராக பணியில் சோ்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதுபோல, அவா்களுக்கு முன் 2006-இல் கேஷூவல் லேபராக சோ்ந்து மஸ்தூராக மாற்றப்பட்டவா்களை முன்தேதியிட்டு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.