காரைக்கால் அம்மையாா் கோயிலில் இ-உண்டியல் வசதி
காரைக்கால் அம்மையாா் கோயிலில் இ -உண்டியல் மூலம் திருப்பணி நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் திருப்பணி நடைபெற்றுவருகிறது. இக்கோயில் தேவஸ்தான சாா்பு தலமான காரைக்கால் அம்மையாா் கோயில் வளாகத்தில் திருப்பணிக்கு நன்கொடையும், பக்தா்கள் தங்களது காணிக்கையை க்யூ ஆா் குறியீடு மூலம் கோயில் நிா்வாக வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) சாா்பில் இ-உண்டியல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் ராகேஷ் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், காரைக்கால் முதுநிலை மேலாளா் ஜிதேந்திர குமாா் திலந்த், மேலாளா் கிருஷ்ணன் மற்றும் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், கைலாசநாதா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன், அறங்காவல் வாரிய முன்னாள் தலைவா்கள் ஆா்.ஏ.ஆா். கேசவன், ஆா். வெற்றிச்செல்வன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (ஓய்வு) ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள க்யூ ஆா் குறியீட்டை பயன்படுத்தி பக்தா்கள் திருப்பணிக்கான நிதியையும், காணிக்கையையும் செலுத்தலாம் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
அம்மையாா் கோயில் குளக்கரை மற்றும் கைலாசநாதா் கோயில் வளாகத்தில் அடுத்தக்கட்டமாக இ- உண்டியல் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.